Tuesday, January 22, 2008

தைப்பூசம்....


இன்று சிங்கப்பூரில் தைப்பூசத் திருவிழா...திருவிழாவை நன்றாக கொண்டாடி கொண்டிருக்கும் இந்த வேளையில் எதற்காக இந்த‌ திருவிழாவை இவ்வளவு சிறப்பாக கொண்டாடுகிறார்கள் என்பதைப்பற்றியும் கொஞ்சம் தெரிந்துக்கொள்வோமே...சரி உங்களுக்காக இந்த குட்டி சுவாமி கதையை சொல்றே கேள்ளுங்க‌....இடும்பன் முருகன் மேல் பக்தி கொண்டு தனக்கு அவனின் பேரருள் கிடைக்க வேண்டுமென்று எண்ணி சக்திகிரி, சிவகிரி என்ற பெயர்களைக்கொண்ட இரு மலைகளை காவடி போல் ஆக்கி, தனது தோளில் சுமந்து நேர்த்திக் கடனை செலுத்தினாறாம்...அப்படி ஆராம்பிக்கப்பட்டு இன்றும் கொண்டாடப்பட்டு வருவதுதான் இந்த தைப்பூசத் திருவிழா...இதற்கிடையிலே நான் கண்டுப்பிடித்த ஒரு சுவாரசியமான விஷயம் ஒன்றும் இருக்கு...நீங்க எத்தனையோ விதமான சுவாமி பாடல்கள கேட்டிருப்பிங்க அனா நா கேட்ட மாதிரி ஒரு பாடல நீங்க கேட்டிருப்பிங்களான்னு தெரியல...மன்மதராசா...ராசான்னு ஒரு பாடல கேட்டிருப்பிங்க...அந்த பாடலுடைய மெட்டுல ஒரு சுவாமி பாடல கேட்டிருக்கிங்களா...கேட்கலனா இப்ப கேள்ளுங்க...

மன்மதராசா மெட்டைக்கொண்ட சுவாமி பாடல்:




உண்மையான மன்மதராசா பாடல்:





வெற்றி வேல் முருகனுக்கு....ஆறோகறா...